சிக்கிள் செல் நோயுடன் வாழ்வதற்கான உதவும் குறிப்புகள்

சிக்கிள் செல் நோயுடன்
வாழ்வதற்கான உதவும் குறிப்புகள்

சிக்கிள் செல் நோயுடன் வாழ்வதற்கான உதவும் குறிப்புகள்

சிறிய நடவடிக்கைகள் வேறுபாட்டை ஏற்படுத்தலாம்

சிக்கிள் செல் நோயை சமாளிப்பது கடினமான உணர்வை ஏற்படுத்தலாம், ஆனால் கீழே கொடுத்துள்ள குறிப்புகள் உதவலாம்:

சிகிச்சை பெறுங்கள்
 • சிக்கிள் செல் நோய் அறிமுகம் உள்ள ஹெமடாலாஜிட்-ஐ சந்திக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. அவர்கள் சிக்கிள் செல் நோய் போன்ற ரத்த கோளாறுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆவர். யாரையும் கண்டறிய முடியாவிட்டால், உங்கள் அடிப்படை மருத்துவரை நெருக்கமாக பின்பற்றவும்
 • சிக்கிள் செல் நோயைச் சமாளிப்பது பற்றி வழக்கமாக ஒரு மருத்துவரிடம் பேசவும். வலி ஏற்படும்போது அதனை சிறப்பாக சமாளிக்க உதவ அவர் திட்டமிடலாம்
 • வலி நெருக்கடி ஏற்படும்போது, உடனே உங்கள் மருத்துவரின் உதவியை நாடவும் அல்லது மருத்துவ உதவி பெறவும். நீங்களாகவே வலி நெருக்கடியை தாங்கிக்கொள்ள வேண்டியதில்லை
 • நீங்கள் ஏஅண்ட்ஈ-க்கு (அவசரநிலை துறை) போனால் அல்லது வீட்டில் வலியை சமாளிக்க முயற்சித்தால், உங்கள் மருத்துவருக்குத் தெரிவிப்பதை உறுதிப்படுத்தவும்
ஆரோக்கியமாக இருத்தல்
 • உங்கள் கைகளைக் கழுவுங்கள், பாதுகாப்பாக தயாரித்த, ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும் மற்றும் நோய் வருவதைத் தவிர்க்க தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
 • மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ச்சியான வெப்பநிலைகளை தவிர்க்க முயற்சிக்கவும்
 • ஈரப்பதத்துடன் இருக்கவும் (ஒரு நாளில் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் அருந்தவும்)
உங்களை நீங்களே பராமரித்துக் கொள்ளுங்கள்
 • நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் வைக்கவும். குடும்பத்தினர் மற்றும் சிக்கிள் செல்லால் ஏற்படும் உணர்வுப் பூர்வமான மற்றும் சமூக சவால்களை சமாளிக்க நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்யலாம்
 • ஆதரவுக் குழுவில் சேர்வது பற்றி ஆலோசிக்கவும், சிக்கிள் செல்லுடன் வாழ்வது பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளங்கள்
 • அழுத்தத்தை குறைத்து அதிக ஓய்வு எடுக்கவும். விசேஷமாக வடிவமைக்கப்படும் உடற்பயிற்சி திட்டம் பற்றி மருத்துவருடன் பேசவும்

உங்கள் மருத்துவருடன் ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்

ஏதாவது சந்தேகங்கள் அல்லது கேள்விகள் கேட்பதாக இருந்தால் முன்னதாகவே குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு மருத்துவரைச் சந்திக்கத் தயாராகுங்கள். மருத்துவரிடம் பேசும்போது நேர்மையாகப் பேசவும்.

சிக்கிள் செல் நோயை சமாளித்தல் என்று வரும்போது, உங்கள் மருத்துவரிடம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பது முக்கியமானது.

Mark
உங்கள் மருத்துவரிடம் கீழ்க்கண்டவாறு சொல்லி உரையாடலை தொடங்குவது உதவிகரமாக இருக்கலாம்:
 • வலி நெருக்கடி உங்கள் உடல், மனம், சமூக வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது
 • உங்களுக்கு எவ்வளவு வலி நெருக்கடி ஏற்படுகிறது

குழந்தை பராமரிப்பிலிருந்து வயது வந்தோருக்கான பராமரிப்பாக மாற்றுதல்

சிக்கிள் செல் நோய் உள்ள குழந்தைக்கு நீங்கள் பெற்றோராகவோ அல்லது பராமரிப்பாளராகவோ இருந்தால், மாற்றும் திட்டத்தை வைத்திருப்பது வயதுவந்தோருக்கான பராமரிப்பாக மாற்ற உதவலாம். மருத்துவர்கள் மற்றும் வேறு ஆரோக்கிய பராமரிப்பு வழங்குபவர்களுடன் கலந்தாலோசிப்பது மாற்றும் செயல்முறையில் உதவலாம்

மாற்றும் செயல் திட்டத்திற்கான பரிந்துரைகள்

12-13 வயது நோயாளிகள் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பாளர்கள் மாற்றும் திட்டம் பற்றி கலந்து பேசுகிறார்கள். 14-15 வயது நோயாளிகள் தாங்கள் எடுக்கும் மருந்துகள் மற்றும் மருந்தளவுகள் பற்றி கற்றுக் கொள்கிறார்கள். 16-17 வயது நோயாளிகள் மற்றும் பராமரிப்பு வழங்குவோர் புதிய வயது வந்தோர் பராமரிப்பு வழங்குவோரை அடையாளம் காணத் தொடங்குகிறார்கள். 18 மற்றும் அதற்கு அதிக வயது நோயாளிகள் புதிய வயது வந்தோர் பராமரிப்பு வழங்குவோரிடம் செல்கிறார்கள். 12-13 வயது நோயாளிகள் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பாளர்கள் மாற்றும் திட்டம் பற்றி கலந்து பேசுகிறார்கள். 14-15 வயது நோயாளிகள் தாங்கள் எடுக்கும் மருந்துகள் மற்றும் மருந்தளவுகள் பற்றி கற்றுக் கொள்கிறார்கள். 16-17 வயது நோயாளிகள் மற்றும் பராமரிப்பு வழங்குவோர் புதிய வயது வந்தோர் பராமரிப்பு வழங்குவோரை அடையாளம் காணத் தொடங்குகிறார்கள். 18 மற்றும் அதற்கு அதிக வயது நோயாளிகள் புதிய வயது வந்தோர் பராமரிப்பு வழங்குவோரிடம் செல்கிறார்கள்.

மாற்றம் பற்றிய உங்கள் குழந்தை மருத்துவருடன் பேசுவதற்கான குறிப்புகள்:

 • சம்பந்தப்பட்ட எல்லா மருத்துவ வரலாற்றையும் கலந்து பேசவும் (மருத்துவமனையில் சேர்த்தல், வலி நெருக்கடிகள், ஏற்றுதல்கள்). உங்கள் முதன்மை மருத்துவரின் தகவல்களை தயாராக வைத்திருக்கவும்
 • உங்கள் குழந்தையின் மருந்துகளின் பெயர்கள் மற்றும் அவர் எவ்வளவு எடுக்கிறார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். சந்திப்பிற்கு அவர்களின் மருந்துகளை எடுத்து வாருங்கள்
 • உங்கள் குழந்தைக்கு ஏற்படும் அறிகுறிகள் பற்றி கலந்து பேசவும்

நீங்கள் தனிமையாக உணரலாம் என்பதால் இந்த நேரங்களில் உங்களுக்கு ஆதரவு இருப்பது முக்கியமானது

குடும்பத்தினர், நண்பர்களை சார்ந்திருக்கும்போது சிக்கிள் செல் நோய் உள்ளவர்கள் பாரம் குறைந்தவர்களாக உணரலாம். மற்றவர்கள் வழங்கும் உதவியை குறைத்து மதிப்பிடக் கூடாது.

ஆலோசிப்பதற்கான உணர்வுப்பூர்வமான மற்றும் சமூக ஆதரவு பின்னலை உருவாக்க உங்களுக்கு உதவக்கூடிய 3 கருத்துக்கள்
 • 1. நீங்கள் உணர்வுப்பூர்வமாக எவ்வாறு உணர்கிறீர்கள் மற்றும் எவ்வாறு நீங்கள் வலி நெருக்கடிகளை சமாளிக்கிறீர்கள் என்பது பற்றி ஒரு மருத்துவருடன் பேசுங்கள்
 • 2. சிக்கிள் செல்லின் உணர்வு மற்றும் சமூக சவால்களை நீங்கள் சமாளிக்க உதவக் கூடியவர்களை அடைதல்
 • 3. சிக்கிள் செல் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் ஆன்லைன் தொடர்புகளை உருவாக்கவும்

அதிக சிக்கிள் செல் ஆராய்ச்சி இந்த நோய்க்கான காரணங்களை சிறப்பாக புரிந்துகொள்ள மற்றும் சாத்தியமாகும் சிகிச்சைகளை உருவாக்க வழிவகுக்கும். நினைவிருக்கட்டும் நீங்கள் தனியாக இல்லை. உலகம் முழுவதும் சிக்கிள் செல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு குழுக்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை கண்டறிய உதவி தேவையா? உங்கள் மருத்துவருக்கு அந்தக் குழுக்களை தெரியுமா என்று கேளுங்கள். அவர்கள் உங்கள் பகுதியில் உள்ள அமைப்புகளுடன் தொடர்புகொள்ள உங்களுக்கு உதவுவார்கள்.

உதவிகரமான ஆதாரங்கள் கிடைக்கின்றன

இப்பொழுது நீங்கள் NotAloneInSickleCell.com-ஐ விட்டு வெளியேறுகிறீர்கள்

நீங்கள் NotAloneInSickleCell.com இணையதளத்தை விட்டு வெளியேறி மூன்றாம் தரப்பினரால் இயக்கப்படும் இணையதளத்தில் நுழைய இருக்கிறீர்கள். இந்த மூன்றாம் தரப்பு இணையதளத்தில் உள்ள தகவல்களுக்கு நோவார்டிஸ் பொறுப்பேற்காது மற்றும் கட்டுப்படுத்தாது.